28 C
Colombo
Wednesday, September 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிர்வரும் நாள்களில் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக்கப்படும் – அஜித் ரோஹண

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் நாள்களில் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக்கப்படும்; என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளி பேணாமை ஆகியவற்றுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நாட்டுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இலங்கை குற்றவியல் சட்டத்தின் 262 சரத்தின் பிரகாரம் ஆறு மாத காலச் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்க முடியும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திட்டமிட்ட வகையில் வேண்டுமென்றே ஒருவர் நோயைப் பரப்பினால் குற்றவியல் சட்டத்தின் 263ஆம் சரத்தின் கீழ் இரண்டாண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சட்டத்தை மீறினால் அவர் தனது தொழிலை இழப்பார். கொரோனா வைரஸை திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே பரப்பி, அதனால் ஒருவர் உயிரிழந்தால் குற்றவியல் சட்டத்தின் 298ஆம் சரத்தின் பிரகாரம் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles