26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிர்வரும் வருடத்துக்குள் நாட்டினுடைய பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்ள முடியும் – ஜனாதிபதி

எதிர்வரும் வருடத்துக்குள் நாட்டினுடைய பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட உரையின்போது தெரிவித்துள்ளார்.

வரவு- செலவு திட்ட உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது?

கடந்த சில மாதங்களாக நாம் மேற்கொண்ட விடாமுயற்சிகளினதும் கடுமையான நடவடிக்கைகளினதும் விளைவாக பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழும் நம்பிக்கை ஒளிக்கீற்று வீசுகின்றது.

நாட்கணக்கில் வரிசைகளில் நின்று, தங்கியிருந்து போராட்டம் செய்த யுகத்தைக் கடந்து, கவலையும் பிரச்சனைகளும் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ள நிம்மதியான ஒரு யுகத்தை நாம் நெருங்கியுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. படுகடன் மறுசீரமைப்பு பற்றி இந்தியாவுடனும் சீனாவுடனும் நாம் பேச்சுவார்த்தை நடாத்துகின்றோம். இப்பேச்சுவார்த்தைகள் சாதகமான பெறுபேறுகளுக்கு வழிவகுக்கும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பணவீக்கத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்தது. அதேபோன்று ரூபாய் வலுவடைந்து வருகின்றது. இந்நிலைமையைத் தொடர்ந்தும் பேணி வருவது எமது எதிர்பார்ப்பாகும். தொடர்ந்தும் இப்படிமுறையின் ஊடாக முன்னோக்கிச் செல்வதன் மூலம் அடுத்த வருடத்துக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு எங்களால் முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இருப்பினும், அதிலிருந்து திருப்திப்பட எங்களால் முடியாது. நாம் புதியதொரு பயணத்தை ஆரம்பித்தல் வேண்டும்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து, இதுவரை எமது நாட்டில் காணப்பட்ட பொருளாதார முறையை மாற்றுவதற்காக ஆரம்ப அடிப்படைகளை தயாரிப்பது இடைக்கால வரவுசெலவு முன்மொழிவுகளின் நோக்கமாகும் என்பதை நான் குறிப்பிட்டேன். இன்று சமர்ப்பிக்கின்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவினூடாக நவீன உலகுக்கு பொருத்தமான புதிய பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்பும் செயன்முறையை ஆரம்பிப்பதாகவும் நான் அதில் குறிப்பிட்டேன்.

சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்கின்ற சந்தர்ப்பத்தில், எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா? நாம் எங்கே தவறு விட்டோம்? எங்களுக்கு தவறிய இடம் எது?

நான் சுதந்திர இலங்கையில் பிறந்தவன். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர். அவ்வேளையில் ஆசியாவின் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் யப்பானில்தான் இருந்தது. இலங்கையர்களாகிய நாம் இரண்டாம் இடத்தில் இருந்தோம் என்பது யாவரும் அறிந்ததே. இலங்கையின் தனிநபர் வருமானம் ஐ.அ.டொலர் 3,815 ஆனால் யப்பானின் தனிநபர் வருமானாம் ஐ.அ.டொலர் 39,285 ஆகும்.

எனது இன்னுமொரு தனிப்பட்ட அனுபவம் எனக்கு நினைவில் வருகின்றது. 1991ஆம் ஆண்டில், நான் கைத்தொழில் அமைச்சர் பதவிவகித்த கால கட்டத்தில் வியட்நாமின் கைத்தொழில் அமைச்சர் இலங்கைக்கு வந்தார். எமது திறந்த பொருளாதார முறை பற்றியும்கைத்தொழில்மயமாக்க உபாயங்கள் பற்றியும் ஆராய வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. நான் அவருக்கு விளக்கமளித்தேன். பாரிய கொழும்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

1995 ஆண்டளவில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகளின் அளவு ஐ.அ.டொலர் 2.1 பில்லியனாகும். வியட்நாமின் வெளிநாட்டு ஒதுக்களின் அளவு ஐ.அ.டொலர் 1.3 பில்லியனாகும்.. வியட்நாம் அமைச்சர் எமது முறைமைகளைக் கற்றுக்கொண்டு தனது நாட்டுக்குச் சென்றார். இன்றைய நிலை என்ன? வியட்நாமின் வெளிநாட்டு ஒதுக்கின் அளவு ஐ.அ.டொலர் 109.4 பில்லியனாகும் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கத்தின் அளவு ஐ.அ.டொலர் 3.1 பில்லியனாகும்.

நாம் பின்னோக்கிப் பார்ப்போம். வண்ண வண்ண அரசியல் கண்ணாடிகளை கழட்டி வைத்துவிட்டு பார்ப்போம். நாங்கள் ஏன் தவறு செய்தோம்? நாங்கள் எங்கே தவறு செய்தோம்? எங்களுக்குத் தவறியதா? அப்படியில்லாவிட்டால் நாம் தவறிழைத்துக் கொண்டோமா?

இன்று எமது நாட்டில் வருமானம் பெறுகின்ற பல பிரதான துறைகள் காணப்படுகின்றன. ஒன்று, பெருந்தோட்டப் பொருளாதாரம் அடுத்தது, சுதந்திர வர்த்தக வலயம். ஆடைக் கைத்தொழில், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. அவற்றை நோக்கும் போது சுதந்திரத்தின் பின்னர் நாட்டுக்கு வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சில பிரதான வழிகளை மாத்திரம் எங்களால் நிர்மாணித்துக் கொள்ளக்கூடியதாக இருந்துள்ளது. அதற்கு அப்பால், பாரியளவில் வெளிநாட்டு வருமானங்ளை ஈட்டுகின்ற துறைகளை எங்களால் இதுரை நிர்மாணித்துக் கொள்ளமுடியாதது ஏன்? இதுவே நாம் கவனமாக சிந்தித்துப்பார்க்க வேண்டிய ஒரு விடயமாகும்.

கடந்த காலங்கள் முழுவதும் நாம் உற்சாகம் அடைந்தது, சந்தோசமடைந்தது எதிர்காலத்திற்குப் பயனளிக்கக் கூடிய விடயங்களுக்காகவா அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களில் வெளியில் தென்படக்கூடிய விடயங்களுக்காகவா? வெற்றிகரமான தனியார் தொழில்களை தேசியமயப்படுத்தும் போது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இலவசமாக அரிசி வழங்கும்போது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவ்வாறான தீர்மானத்தை எடுத்த அரசாங்கம் தற்காலிகமாக பிரபல்யமடைந்தது.

இதன் காரணமாக, வீதி விளக்கொன்றினைப் பொருத்துவதன் மூலம் நாம் திருப்தியடைந்தோம். ஆனால் மின்னுற்பத்தியை அதிகரிப்பது குறித்து நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவில்லை.

உண்மையில், நாட்டின் நீண்ட கால அபிவிருத்திக்கு அடிப்படையாக இருப்பது பிரபல்யமான தீர்மானங்களா? அவ்வாறின்றி சரியான தீர்மானங்களா? பல சந்தர்ப்பங்களில் எமது நாட்டில் சரியான தீர்மானங்களுக்கு பதிலாக பிரபல்யமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இன்றும்கூட பெரும்பாலானவர்கள் பிரபல்யமான தீர்மானங்களை எடுப்பதற்கே முயற்சிக்கின்றனர்.

இந்தப் பிரபல்யமான தீர்மான சம்பிரதாயத்தின் பிரதிபலனாக அமைந்தது எது? நிவாரணப் பொருளாதாரம், நிவாரண மனோநிலை நாடு பூராவும் குவிந்து கிடக்கின்றது. மக்கள் நிவாரணங்ளைப் பெற்றுக் கொள்வதற்கே பழக்கப்பட்டு உள்ளனர். அரசாங்கம் செயற்படுவதும் மக்களுக்கு முன்னேறுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கல்ல. நிவாரணம் வழங்குவதற்கு மாத்திரமே.

ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளை நினைவுபடுத்தி ஒரு முறை பின்வருமாரு லீக்வான்யூ குறிப்பிட்டார் ‘சிங்கப்பூரில் நான் கடினமான ஆனால் சரியான பாதையை பின் பற்றினேன். இலங்கையின் பண்டாரநாயக்க பிரபல்யமான வழியைப் பின்பற்றினார்’.

இந்த பிரபல்யமான பாதையில் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதன் மூலம் நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது. எப்போதும் அடுத்தவர்களுக்கு கடனாளியாகி நிவாரணம் வழங்குவதால் சுபிட்சம் எதுவும் ஏற்படாது. எனவே நாம் தற்போது இந்த நிலைமையிலிருந்து மீளுவோம். எமது சிந்தனை வடிவங்களை மாற்றிக் கொள்வோம்.

அதனால் நாம் புதிதாகச் சிந்திப்போம். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும்பொருட்டு புத்தாக்க மிக்க அணுகுமுறைளை உருவாக்கிக் கொள்வோம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles