எரிபொருளை பதுக்கிய மூவர் கைது!

0
344

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மாகும்புர, மாத்தறை மற்றும் பூகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மாகும்புர பகுதியைச் சேர்ந்தவரிடமிருந்து 1,350 லீற்றர் டீசலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மாத்தறையில் கைது செய்யப்பட்ட நபரிடம் 800 லீற்றர் டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, பூகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 32 லீற்றர் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பூகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.