25.1 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் தொற்று ஏற்படாதிருக்க  பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: GA

ஏனைய மாவட்டங்களை போல யாழில் தொற்று ஏற்படாதிருக்க  பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார்  அரசாங்க அதிபர் க.மகேசன் 

தற்போதைய  யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க யாழ் மாவட்டஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் மேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் தற்போது வவுனியா பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 
அவர்கள் யாழிற்கு வந்து சென்றதன் பிரகாரம் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்  அனைவரும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் யாழ் மாவட்டத்தில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 
இந்த நிலையில்  நேற்றைய தினம் வரை 241 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேரை தனிமைப்படுத்தியிருக்கின்றோம். படிப்படியாக தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. தனிமைப்படுத்தப்படுவோர் PCR பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். 
கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இந்த தனிமைப்படுத்தல் எண்ணிக்கையானது மிகவும் குறைவடைந்து காணப்படுகின்றது. மருதங்கேணியில் அமைந்துள்ள கோரோனா சிகிச்சை நிலையத்தில் தற்போது 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அதனைவிட  நாளாந்த வைத்திய சேவைகள் வழமையாக இடம்பெற்று வருகின்றது. அத்தோடு சுகாதாரப் பிரிவினர் குறித்த வைத்தியசாலையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள்.
 இதனைவிட வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பாக  உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஏற்கனவே சீதுவ பகுதியிலிருந்து பேரூந்தில் பயணம் செய்த 9 பேரும் அதனை விட அதன் சாரதி நடத்துனர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு ள்ளார்கள்.  அவர்களுக்கு விரைவில் PCR பரிசோதனை  மேற்கொள்ளப்பட விருக்கின்றது. யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் தற்பொழுது ஏனைய பகுதிகளில் வேகமாக பரவி வருவதற்கேற்ப நாங்களும் சில முன்னேற்பாடு நடவடிக்கைகளை மிக இறுக்கமாக செயற்படுத்த வேண்டியுள்ளது. எனவே யாழ் மாவட்டத்தை தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 
அதேபோல் நாளை வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்  இடம்பெறவுள்ளது. அதேபோல் யாழ் மாவட்ட கொரோனா செயலணி கூட்டம் விரைவில் இடம்பெறவுள்ளது. 
தற்போதைய சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னேற்பாடு செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம். எனினும் பொதுமக்கள் இந்த விடயத்தில் மிகவும் விழிப்பாக இருத்தல் வேண்டும். 
அதாவது பொதுமக்கள் ஒன்று கூடல்களைத் தவிர்த்து அநாவசியமான பயணங்களைத் தவிர்த்து வீடுகளில் இருந்து தங்களுடைய செயற்பாடுகளை செய்யலாம். 
எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கருத்தில் எடுக்கவேண்டும்.  தற்பொழுது விரத காலங்கள் ஆரம்பித்துள்ளதன் காரணமாக ஆலயங்களுக்கு செல்வதை தவிர்த்து வீடுகளில் சுயகட்டுப்பாட்டுடன் இருந்து நீங்கள் வழிபாடு செய்வதன் மூலம் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும்  தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles