24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஐ.சி.சி. விதிகளை மீறிய இங்கிலாந்து வேகப்பந்து வீரர்- டாப்லீக்கு அபராதம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லீ ஐ.சி.சி.யின் விதி 2.2ஐ மீறியுள்ளார். அந்த விதியின்படி, ‘சர்வதேச போட்டிகளில் ஆடுகளத்தின் பொருட்களையோ அல்லது கிரிக்கெட் உபகரணங்களையோ, ஆடைகளையோ அவமதித்தால் அபராதம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ரீஸ் டாப்லீ நாற்காலியை எடுத்து படிக்கட்டின் கைப்பிடிகளை ஓங்கி அடித்தார். இதற்காக போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தை ரீஸ் டாப்லீ ஏற்றுக்கொண்டார். ஐ.சி.சி.யின் லெவல் 1 விதியை
மீறிமையினால் குறைந்தபட்ச அபராதமே விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles