ஐ.ம.ச தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கை

0
37

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயகத்தின் அடிப்படையிலான மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும், சமூக நீதியைப் பாதுகாக்கும் நல்லாட்சிக்காக, புதிய அரசாங்கத்துக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சிக்குத் தேவையான பலமும், மக்களின் கனவுகள் நனவாக்கும் ஆற்றலும் தற்போதைய அரசாங்கத்துக்கு குறைவில்லாமல் கிட்டியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நாட்டு மக்களின் அபிலாஷைகளைக் கட்டியெழுப்பும் இயலுமை தேசிய மக்கள் சக்திக்கு உதயமாக வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.