ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து நவம்பர் மாதம் கிடைக்கும்?

0
282

“ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து நவம்பர் மாதம் கிடைக்கும்” என்று லண்டன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லண்டனின் “சன்” நாளிதழ், “லண்ட னின் புகழ்மிக்க மருத்துவமனை ஒன்றின் முக்கிய ஊழியர், ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து நவம்பர் மாதம் தயாராகிவிடும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்தில் தடுப்பு மருந்து கிடைக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, பல்வேறு நாடுகளில் பரிசோதனையை மனிதர்களுக்கு நடத்தி வருகின்றன. இதில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் அதன் முடிவுகள் நல்ல செய்தியாகவே உள்ளன என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையை நெருங்கியுள்ளன.