ஒட்டு கேட்கப்படும் டலஸ் அழகப்பெருமவின் தொலைபேசி இணைப்பு!: இதற்கு உத்தரவிட்டார்கள் யார்?

0
379

எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஒட்டு கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சிங்கள தொலைகாட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என்று இந்த மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாட்டில் கடந்த செவ்வாய்க் கிழமைக்கு பின் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.