மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைவராக மெஹதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் முறையே டிசெம்பர் 8, 10, 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இதையடுத்து ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக ஷாண்டோ இடம்பெறவில்லை. அதனால் மெஹதி ஹசன் மிராஸ் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணி விவரம் வருமாறு, மெஹதி ஹசன் மிராஸ் (தலைவர்), லிட்டன் தாஸ் (விக்கெட் காப்பாளர்), தன்சித் ஹசன் தமிம், சௌமியா சர்கார், பர்வேஸ் ஹொசைன் எமான், மஹ்மதுல்லா, ஜேக்கர் அலி அனிக், ஆபிப் ஹொசைன் துருபோ, ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், ஷொரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சகிப், நஹித் ராணா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.