ஒரு இறாத்தல் பாண் 300 ரூபாக்கு விற்பனை

0
174

ஒரு இறாத்தல் பாண் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டுவருவதாக அகில இலங்கை பேக்கரி
உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு மூட்டை கோதுமை மாவின் விலை குறைக்கப்படாவிட்டால் பாணின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அச்சங்கம் முன்னர் எச்சரித்திருந்தது.
நாடளாவிய ரீதியில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ள நிலையில் பாணும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.