ஓமான் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஓமான் எயார் தனது சர்வதேச விமான சேவைகளை இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்கு மீண்டும் தொடங்கவுள்ளது.
ஓமான் எயார் வாரத்துக்கு இரு விமான சேவைகளை இலங்கை, குவைத், பஹ்ரேன் ஆகிய நாடுகளுக்கு இயக்கவுள்ளது.
கொவிட் -19 பரவுதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விமானப் பயணங்களை நிறுத்திய ஓமான், ஏழு மாதங்களுக்குப் பின் கடந்த ஒக்டோபர் 1 முதல் சர்வதேச விமான பயணங்களை மீள ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான சேவையை ஓமான் எயர் ஆரம்பித்துள்ளபோதிலும் இலங்கை விமான நிலையம் வெளியேறும் பயணிகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் விமானத்தில் வெளிச்செல்லமுடியுமே தவிர, நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.