24 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஓய்வு குறித்து அஸ்வின் கருத்து!

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ரவிசந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார்.
ரவிசந்திரன் அஸ்வின் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குகிறார்.

இதுவரை 100 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ரவிசந்திரன் அஸ்வின் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குகிறார். 37 வயதான அஸ்வின் ஓய்வு பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசிய அஸ்வின் அவர் கூறுகையில்,
“ஓய்வு குறித்து தற்போதைக்கு என் மனதில் எந்த நினைப்பும் இல்லை. ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன்.”

“எதிர்காலத்தை கணக்கில் கொண்டது கிடையாது. வயதாகும்போது கூடுதல் முயற்சி, பயிற்சி தேவை. அந்த வகையில் நான் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகமான முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டு வருகிறேன்.” “எனது ஓய்வு குறித்து இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் இது போதும் என்று தோன்றும் போது நான் ஓய்வு பெற்று விடுவேன்,” என்று தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles