இந்திய ரென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா வரும் பெப்ரவரி மாதம் ஓய்வு பெறவுள்ளார் என அறிவித்துள்ளார். 36 வயதான சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் 6 கிராண்ட்ஸ்லம் பட்டங்களை வென்றுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், தனது 20 ஆண்டு கால தொழில்முறை ரென்னிஸ் வாழ்க்கைக்கு அடுத்த மாதம் – பெப்ரவரி முற்றுப்புள்ளி வைக்கிறார். அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள டபிள்யூ. ரி. ஏ. 1000 நிகழ்வு போட்டியே தனது இறுதிப்போட்டி என கூறியுள்ளார். கடந்த பருவ காலத்திலேயே ஓய்வு முடிவை அவர் அறிவித்தார். ஆனால், காயம் காரணமாக அமெரிக்க ஓப்பனில் அவர் விளையாடவில்லை. எதிர்வரும் 16ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகும் ஆவஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்கும் அவர் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடவுள்ளார். சானியா இதுவரை இரண்டு அவுஸ்திரேலிய ஓப்பன் சம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். 2016 இல் மார்டினா ஹிங்கிஸூடன் பெண்கள் இரட்டையர் மற்றும் 2009 இல் மகேஷ் பூபதியுடன் கலப்பு இரட்டையர் போட்டிகளில் அவர் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.