கடன் வழங்கும் நிறுவனங்களால் கிராமப் புறங்களில் அதிக பாதிப்பு!

0
96

முறைசாரா நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக கடன் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்களால் கிராமப் புறங்களில் மட்டும் 28 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் – சுமார் 24 இலட்சம் பேர் பெண்களாவர் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பது தொடர்பான மேற்பார்வை குழுவின் கலந்துரையாடலில் தெரியவந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.