இலங்கையின் விமானப் படையின் 18ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் 17 ஆவது தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் ஓய்வு பெறவுள்ள நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் 17 ஆவது தளபதியாக பதவியேற்றார்.
இவர் தனது பதவிக்காலத்தில் சிறந்த சேவைக்கான பதக்கம், தேசபக்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.