கடிதம் எழுதி வைத்துவிட்டு வைத்தியர் தற்கொலை !

0
129
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதான வைத்தியர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக இல்லத்திலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்குறித்த வைத்தியர் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். தன்னுடைய இந்த தற்கொலைக்கு எவரையும் சந்தேகிக்க வேண்டாம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தற்கொலைக்கான வேறு காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனையின் போது தற்கொலை செய்துக்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.