கனடாவில் இந்துக் கோயிலைச் சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

0
102
Canadian flag moved by the wind

கனடா, எட்மண்டன் நகரில் சுவாமி நாராயண் இந்து கோயில் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அடையாளம் தெரியாத நபர்களினால் வர்ணங்களைப் பூசி சேதப்படுத்தியுள்ளனர்.

கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து அதிகரித்து வரும் பிரிவினைவாத போக்கை தடுக்கும் வகையில் இந்தச் செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அரசு கோரியுள்ளதுடன் இந்த செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.