கனியவளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பு

0
146

கனியவள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனியவளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியமானது எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கனியவளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 11 தொழிற்சங்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கனியவளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியத்தின் உறுப்பினர் அசோக்க ரங்வெல

தற்போதைய அரசாங்கமானது கனியவள சட்டத்தை மாற்றுவதற்கான முன்மொழிவுகளை தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ளது.

இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதனூடாக பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனமே பலம் பொருந்திய நிறுவனமாக காணப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்னெடுக்கின்றது.

2002ஆம் ஆண்டு விசேட நிலையியற் கட்டளையின் மூலம் கனியவள சட்டத்தின் கீழ் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டன.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் இலாபம் கிடைக்கப்பெற்றதா என்றே நாம் கேட்கின்றோம்.

வேறு ஒரு தரப்பினர் எமது நாட்டுக்குள் வருவதனூடாக எமது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்த இலாபமும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாகவே இந்த சட்டத்துக்கு நாம் எமது தெரிவித்து வருகின்றோம்.