கம்பஹா மக்களுக்கு 14 மணித்தியாலயங்கள் கால அவகாசம்

0
234

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் இன்று (26) அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 14 மணித்தியாலயங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 முதல் இரவு 10 மணிவரையில் அத்திவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று காலை வரையில் 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகள், குளியாபிட்டிய பகுதியில் 5 பொலிஸ் பிரிவுகள், கொழும்பில் 15 பொலிஸ் பிரிவுகள், களுத்துறையில் 3 பொலிஸ் பிரிவுகள் மற்றும் வெல்லம்பிட்டிய, கொதட்டுவ, முல்லேரியாவ மற்றும் வெலிகட பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடஙற்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறிய 1,076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 156 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.