கரவெட்டி” ராஜகிராமம்” இன்று இரவு முடக்கப்படலாம்?

0
1853

கரவெட்டி “ராஜ கிராமம்” இன்று இரவிலிருந்து முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கரவெட்டி ராஜ கிராம பகுதியில் 70 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோருக்கு pcr  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவினை பொறுத்து குறித்த பகுதி  இன்று இரவிலிருந்துமுடக்கப்பட கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தைக்கு  மீன் ஏற்றி  இறக்கம் கூலர் வாகன சாரதி நடத்துனர்கள் அப்பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களிற்கு நேற்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முடக்கம் இன்று இரவிலிருந்து நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.