31 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனையில் வணக்க ஸ்தலங்கள் அனைத்தும் பூட்டு!

கொரோனா தீநுண்மியின் கொடுர தாக்கம் காரணமாக கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சகல வணக்கஸ்தலங்களும் காலவரையற்றுப் பூட்டப்பட்டுள்ளன.

நேற்று (30) வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் மீலாதுன்நபி விழா வழமைபோன்று இடம்பெறவில்லை. வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகைகளும் இடம்பெவில்லை. -இந்துக்களின் கேதாரகௌரி விரதம் ஏலவே ஆரம்பித்து நடைபெற்றுவந்தபோதிலும் தற்போது பக்தர்கள் ஆலயத்திற்குச் செல்லாமல் வீட்டில் இருந்து விரதத்தை அனுஸ்டித்துவருகின்றனர்.

சிவபிரானை நோக்கிய உமையம்மனின் கேதாரகௌரி விரதம் 28நாட்கள் அனுஸ்ட்டிக்கப்படுவது. ஆலயத்திற்கு சென்று காப்பறுத்து பின்பு காப்புக்கட்டி வழிபடுவதுவழமை. இம்முறை எதிர்வரும் 15ஆம் திகதி தீபாவளியன்று காப்புக்கட்டு நிகழ்வு நடைபெறவிருக்கிறது. எனினும் இன்றைய சூழ்நிலையில் காப்புக்கட்டு நிகழ்வை எவ்வாறு நடாத்துவதென்பது பற்றி மதகுருமார் சிந்தித்து வருகின்றனர்.

கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துவருகிறது. நேற்றைய நிலைவரத்தின்படி 61பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். கிழக்கின் நிலைமை மோசமடைந்துவருவதால் சுகாதாரத்துறையினரால் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன.

பொதுமக்கள் ஆலயம் பள்ளிவாசல் தேவாலயம் போன்ற வணக்கஸ்தலங்களுக்குச் செல்லாது வீட்டிலிருந்தே இறைவனை வணங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம் மற்றும் சம்மாந்துறை ஹிஜ்ரா பதூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் பூட்டப்பட்டுள்ளதையும் இங்கு காணலாம்.

Related Articles

அனைவரும் இந்துவாக திரட்சிபெற வேண்டும்!

வெடுக்குநாறி மலையிலுள்ள சிவனாலய விவகாரத்தைத் தொடர்ந்து பல பக்கங்களிலும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.இவ்வாறான கண்டனங்கள் வழமையானவை.இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது, கண்டனங்களை முன்வைப்பதும் - பின்னர் சில நாட்கள் - வாரங்களுக்கு...

இப்படியும் நடக்கிறது…!

நீச்சல் குளத்தில் தண்ணீர் அடிக்கடி கெட்டுவிடுவதை அறிந்தார் ஹோட்டல் முதலாளி.காவல்காரனை அழைத்து ஒரு வாரத்துக்கு யாரையும் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்காதே, என்றார்.அன்று மாலையே இளம் பெண் ஒருத்தி குளிப்பதற்காக...

சவேந்திர சில்வாவை வெளியேற்றும் தீவிர முயற்சியில் மஹிந்த கும்பல்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ தலைமையினலான ஸ்ரீலங்கா...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அனைவரும் இந்துவாக திரட்சிபெற வேண்டும்!

வெடுக்குநாறி மலையிலுள்ள சிவனாலய விவகாரத்தைத் தொடர்ந்து பல பக்கங்களிலும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.இவ்வாறான கண்டனங்கள் வழமையானவை.இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது, கண்டனங்களை முன்வைப்பதும் - பின்னர் சில நாட்கள் - வாரங்களுக்கு...

இப்படியும் நடக்கிறது…!

நீச்சல் குளத்தில் தண்ணீர் அடிக்கடி கெட்டுவிடுவதை அறிந்தார் ஹோட்டல் முதலாளி.காவல்காரனை அழைத்து ஒரு வாரத்துக்கு யாரையும் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்காதே, என்றார்.அன்று மாலையே இளம் பெண் ஒருத்தி குளிப்பதற்காக...

சவேந்திர சில்வாவை வெளியேற்றும் தீவிர முயற்சியில் மஹிந்த கும்பல்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ தலைமையினலான ஸ்ரீலங்கா...

ரூ . 100,000 சம்பளம் வாங்குபவர்கள் கூட போதுமான உணவை உண்ண முடியாத நிலை !

இந்த நாட்டில் 32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரி பிரசன்ன விஜேசிறி...

கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவை!

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவைப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் பட்டயக் கணக்காளர்களால் நடத்தப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில்...