24.6 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கழிவறை விஷ வாயு: 3 பெண்கள் உயிரிழப்பு

கழிவறையில் இருந்து வெளியான விஷவாயு தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவில் புதுச்சேரியின் ரெட்டியார்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழிவறைக்கு சென்ற மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை கண்ட அவரது மகள் காப்பாற்ற சென்று அவரும் மயங்கி விழுந்துள்ளார். தனது பாட்டி மற்றும் தாய் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்ட சிறுமி அவர்களை காப்பாற்ற சென்றபோது அவரும் மயங்கி விழுந்துள்ளார்.

3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி மற்றும் மற்றுமொரு பெண் ஆகிய இருவரும் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்துஇ சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்பகுதியில் அமைந்திருந்த கழிவுநீர் வடிகாலில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு அந்த வாயு வீட்டின் கழிவறையின் வாயிலாக வெளியேறி 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளமை குறிப்பிடதக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles