காசா நகரத்தின் அல்சிபா மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையின் முன்வாயில் தாக்கப்பட்டபோது அந்த பகுதியில் கூடாரத்திலிருந்த அனஸ் அல்-ஷரீப் மற்றும் முகமது க்ரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌஃபல் மற்றும் மோமன் அலிவாஆகியோர்கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
இந்த ‘இலக்குவைக்கப்பட்ட படுகொலை” ஊடக சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு அப்பட்டமான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.