ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எமது உரிமைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கு அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இன்று வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இதனைத் தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே போன்ற கோஷங்களை எழுப்பி, பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.