கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட எழுததாளர் மேம்பாட்டுக் கூட்டம் இன்று(10) காத்தான்குடி பிரதேச செயலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சரியா சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வன், பேராசிரியர் எஸ்.யோகராசா, உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது எழுத்தாளர் அறிமுகம் இடம் பெற்றதுடன் ஆவணப்படமும் திரையிடப்பட்டது.