காரைநகர் தோப்புக்காடு பகுதியில் 82 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடிக்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வராமல் கடற்படையினரின் உதவியுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது