25 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

காஸாவின் இரு பாடசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் – 80 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது.

காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பாடசாலைகள் மீதும் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

இந்த நிலையில் இரண்டு பாடசாலைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பாடசாலையில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த பாடசாலை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின.

இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானதோடு. ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் சேர்த்தனர்.

அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பாசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே பாடசாலைகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. நடத்தும் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவின் மிகப்பெரிய வைத்தியசாலையான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் புகுந்து சோதனை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக கூறி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே அல்-ஷிபா வைத்தியசாலையில் இருந்து நோயாளிகள், மருந்துவ ஊழியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது என்றும் இதனால் வைத்தியசாலையில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் வைத்தியசாலையில் மக்களை வெளியேற உத்தரவிடவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. வைத்தியசாலையின் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற அனுமதித்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.

அல்-ஷிபா வைத்தியசாலையில் மின்சாரம் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த வைத்தியசாலை, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Related Articles

சீரற்ற காலநிலை: மலையக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

மோசமாக பந்து வீசிய சாம் கரன்

மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஒவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாது 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 2006ஆம் ஆண்டு லீட்ஸ்...

நாடு கடத்தப்பட்ட 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள்!

இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இக்குழுவினர் நேற்று...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சீரற்ற காலநிலை: மலையக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

மோசமாக பந்து வீசிய சாம் கரன்

மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஒவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாது 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 2006ஆம் ஆண்டு லீட்ஸ்...

நாடு கடத்தப்பட்ட 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள்!

இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இக்குழுவினர் நேற்று...

பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர்...

ஹோட்டல் விருந்து கொலையில் முடிந்தது!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...