‘கிங்டம்’ படத்தை எதிர்த்து திரையரங்கு முற்றுகை!

0
16

ராமநாதபுரத்தில் ’கிங்டம்’ படத்தை திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதேபோல் கோயம்புத்தூரில் கிங்டம் படம் திரையிடப்பட்ட திரையரங்கை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

 இதனையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 16 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

 சீமான் எதிர்ப்பு
இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிங்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்

அவரது அறிக்கையில், ”கிங்டம் திரைப்படம் ஈழ சொந்தங்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறான சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை தவறாக சித்தரிக்கலாம் என நினைப்பதை அனுமதிக்க முடியாது. வரலாற்றில் நடந்திராத ஒன்றை நடத்ததாக காட்டி, ஈழ மக்களை மிக மோசமாக சித்தரிக்கும் இப்போக்கு கண்டனத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.