கிரகரி வாவியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

0
164

நுவரெலியா – கிரக்கரி வாவியிலிருந்து இன்று மாலை சடலமொன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. குறித்த வாவியில் சவாரியில் ஈடுபடும் படகோட்டிகளால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் 20 -30 வயதுக்கு இடைப்பட்ட ஆணொரு வரினுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் தெரியவராத நிலையில் நுவரெலியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.