கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள் திருட்டுடன் தொடர்புடைய வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 30, 40 வயதுகளையுடைய மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பயணித்த ஒருவரை வழிமறித்து சோதனை செய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைவாக மேலும் இருவரை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.