கிரிக்கெட் நிறுவன விவகாரம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதம்

0
64
கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக சபைக்கு தடை விதிக்கப்பட்டமை, புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்தல் உள்ளிட்ட தற்போதைய நெருக்கடி தொடர்பில் இன்றுபாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் தேவையேற்படின், வாக்கெடுப்பை நடத்தவும் கட்சித் தலைவர்கள் நேற்று தீர்மானித்தனர்.விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் பின்னர் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய, கட்சித் தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.இதற்கிணங்க, ”ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” எனும் தலைப்பில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.இன்று ) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளது.விவாதத்தின் பின்னர், குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் எனவும் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக தற்போதைய ஊழல் நிறைந்த தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட சபையை உடனடியாக நீக்கவேண்டும், ஊழலற்ற கிரிக்கெட் நிர்வாகத்தை வெளிப்படையான முறையில் முன்னெடுத்துச்செல்ல புதிய சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்றத்தினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.