கிளிநொச்சியில் தெருவோர வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போது பரவும் covid 19 தொற்றுக் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் தெருவோர வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அறிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்கள் புடவைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்ற எந்தவிதமான பொருட்களும் தெருவோரங்களில் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது எனவும் மீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதனையும் சட்டநடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.