நாட்டின் தற்போது எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொது மக்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்குத் தனியான பேருந்து சேவை ஒன்று இன்று மாலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கிளிநொச்சியிலுள்ள விவசாய பீடம், பொறியியல் பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கொரோனாப் பெருந் தொற்றுக் காலத்தில் சன நெருசலைத் தவிர்க்கும் வகையில் பணிகளுக்குச் சென்று வருவதற்காக இந்தப் பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக, யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பிரதிப் பதிவாளர் கே. ஞானபாஸ்கரன் அறிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மாலையில் 4.15 மணியளவில் கிளிநொச்சி வளாகத்திலிருந்து யாழ். நோக்கிப் புறப்படவுள்ளது என்றும், இதற்கென 28 ஆசனங்களைக் கொண்ட பேருந்து ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.