கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியில், பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
.
டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த 22 வயதான அந்தோனி அல்பிரட் – அனுஷன் என்பவர் உயிரிழந்துள்ளார்.