கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில், கால்கோள் விழா

0
239

தரம் ஒன்று, புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா, கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில், இன்று நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றார்.

இதன் போது, விருந்தினர்கள், வீதியில் இருந்து, மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.