கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி வருண ஜெயசுந்தர மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இன்று கடமைகளை பெறுப்பேற்றார்.

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை கந்தளாய் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சீரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட மாகாண உயர்பொலிஸ் அதிகாரிகள் அடங்லாக சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டார். புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
