யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குருநகர் கிராமசேவகர் பிரிவுகளான ஜே 65 , 67 ஐ உடன் லொக்டவுனிற்கு உட்படுத்துமாறு சுகாதார பிரிவினர் கொரோனா தடுப்பு செயலணியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட covid 19 கட்டுப்பாட்டு செயலணி தலைவரான மாவட்ட அரச அதிபரிடம் வினவியபோது குறித்த விடயம் தொடர்பான கோரிக்கை எதுவும் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை எனினும் சுகாதார பிரிவினரால் குறித்த கோரிக்கை விடப்படுமிடத்தில் அது தொடர்பில் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்றைய தினம் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஐவர் இனம் கானப்பட்டனர். அவ்வாறு இனம் கானப்பட்ட ஐவரில் மூவர் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தபோதும் இருவர் போலியகொட மீன் சந்தைக்குச் சென்று கடந்த வெள்ளிக்கிழமையாழ்ப்பாணம் திரும்பியிருந்தனர். அவ்வாறு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் வெள்ளிக் கிழமை இரவு தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டு சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரிற்கும் அன்றைய தினம் உறுதியான பெறுபேறு கிடைக்காது மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரியினால் குருநகரைச் சேர்ந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சமயம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குருநகரின் இரு கிராம சேவகர் பிரிவுகளையும் உடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடப்படவுள்ளது.
இது தொடர்பில் யாழ் மாவட்ட covid 19 கட்டுப்பாட்டு செயலணி தலைவரான மாவட்ட அரச அதிபரிடம் வினவிய போது குறித்த விடயம் தொடர்பான கோரிக்கை எதுவும் தற்போது வரை கிடைக்கப் பெறவில்லை எனினும் சுகாதார பிரிவினரால் குறித்த கோரிக்கை விடப்படுமிடத்தில் அது தொடர்பில் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்