குறிப்பிடத்தக்க ஆபத்து – டிரம்பின் புதிய வரி குறித்து சர்வதேச நாணயநிதியம்!

0
53

உலக பொருளாதாரத்திற்கு மேலும் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை தவிர்ப்பது அவசியம் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ  பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் காணப்படுகின்ற சூழலில் அமெரிக்காவின் புதிய வரிகள் உலகளாவி ய பொருளாதார வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை குறிக்கின்றன.

உலக பொருளாதாரத்திற்கு மேலும் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை தவிர்ப்பது அவசியம்.

அமெரிக்காவும் அதன் சகாக்களும் வர்த்தக பதற்றத்திற்கு ஆக்கபூர்வமான விதத்தில் தீர்வை காணவேண்டும் பதற்றத்தை குறைக்கவேண்டும்  என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த மாத இறுதியில் இடம்பெறும் உலகவங்கி சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டங்களின் போது வெளியிடப்படும் உலகின்  பொருளாதார நிலை குறித்த அறிக்கைகளில் சர்வதேச நாணயநிதியம் தனது மதிப்பீட்டினை முன்வைக்கும்