தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள கொவிட் வைரஸ் மிக மோசமாக இலங்கையிலும் பரவி வருகிறது.
இந் நிலையில் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி மற்றும் அதன் தொடர்புடையவர்கள் 23 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த இரு கொத்தணிகளிலும் சுமார் 6145 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தினமும் நூற்றுக்கணக்கான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் போது குணமடைவோரின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியுள்ளது.
புதிய தொற்றாளர்களின் வருகையால் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் பக்கம் கவனம் செலுத்தல் குறைவாக இருக்கலாம்.
இரு கொத்தணிகளிலும் இது வரை 2908 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 1584 கொழும்பு மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.