தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து, போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பில் உள்ள கங்காராமய விஹாரைக்கு சென்று தேஷபந்து தென்னகோன் வழிபாடுகளில் ஈடுபட்டார்.இதன்போது, மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து புதிய பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆசி வழங்கினர்.