27.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன் விசிக போராட்டம்: போலீசார் தடியடி!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவதூறு பேச்சை கண்டித்து சிதம்பரத்தில் போராட்டம் செய்யப் போவதாக நடிகை குஷ்பு அறிவித்ததோடு இன்று காலை சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி காரில் கிளம்பினார். அப்போது அவர் முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நடிகை குஷ்பு தற்போது கேளம்பாக்கம் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பூ தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன்பு திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் விடுதியின் தடுப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடைத்து உள்ளே செல்ல முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினரும் விடுதி அருகே கூடினர்பாஜக மற்றும் விடுதலைச் சிறுத்தையினர் இடையே தள்ளுமுள்ளு போராட்டம் நடைபெற்றதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles