கைஇகால்கள் கட்டப்பட்ட நிலையில் கடற்பகுதியில் கரையொதுங்கிய சடலம்

0
104

மூதூர் – பஹ்ரியா நகர் கடற்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

பிரதேச மக்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து, சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவரது வயிற்றுப் பகுதியில் மண் மூடையொன்றும் கட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில், மூதூர் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.