கைதிக்கு போதைப்பொருளைக் கொண்டுசென்ற நபர் கைது!

0
44

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருளைக் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கைதி ஒருவரைச் சந்திப்பதற்காக உணவு பொதியுடன் புதிய மகசின் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். இதன் போது சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உணவுப் பொதியினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.