25.1 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொங்கிறீட் உடைந்து வீழ்ந்ததில் 6 மாணவர்கள் காயம்!

பாடசாலையில், நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள கொங்கிறீட் தூண் சரிந்து விழுந்ததில் காயமடைந்த மாணவர்கள் அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கிராண்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு-14, கிராண்பாஸ் வேரகொட கனிஷ்;ட வித்தியாலத்திலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஆறு அடி உயரத்தில் இருந்த கொங்கிறீட் தட்டின் ஒரு பகுதியே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது. காயமடைந்த அறுவரில் இரண்டு மாணவிகளும் அடங்குகின்றனர். இவர்கள் முதலாம் தரத்தில் கல்விப்பயிலும் 6 வயதானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஐவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles