கொரியா நகரில் திருவள்ளுவரின் சிலை?

0
67

கொரியாவின் இளையோருக்கான ‘யூத் காங்கிரஸ்’ என்னும் அமைப்பு இம்மாதம் 2ஆம் திகதி, கொரிய பல்லின சமூக குடும்பங்களுக்கிடையேயான ஏற்பாடு செய்த கலந்துரையாடலில், கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், ரஸ்யா, சீனா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாட்டை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, உலகப்பொதுமறையை தந்த தத்துவஞானியான திருவள்ளுவரின் சிலையை சொங்ஜு நகரில் நிறுவ கொரிய தமிழ்ச்சங்கத்திடம் ஆகாரிக்கையொன்றை முன்வைத்தது.

ஆங்கில மொழியிலான இக்கோரிக்கையை கொரிய ஜனாதிபதியின் சமூக இணைப்பிற்கான உதவியாளர், கொரிய மொழியில் கோரிக்கையை அரசுக்கு முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், விரைவில் இதற்கான அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் வரும் என்றும் உறுதியளித்ததாக கொரிய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அரவிந்த ராஜா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நிகழ்வுக்கு தலைமை வகித்த கொரிய ஜனாதிபதியின் சமூக இணைப்பிற்கான உதவி செயலாளர் சுங் சாம் யங், பங்கேற்பாளர்கள் மத்தியில் பல்லின மக்களின் குறைகள் மற்றும் வேண்டுகோள்களை கேட்டறிந்துள்ளார்.