கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கி தத்தளிக்கிறது அமெரிக்கா – ஒரு கோடியை தாண்டியது பாதிப்பு

0
231

அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலிருந்து வருகிறது.

அங்கு நாள்தோறும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்நிலையில், ஒரேநாளில் அங்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அதேபோன்று ஒரேநாளில் 1000 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 41 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 63 இலட்சத்துக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர்.