முன்னணி நடிகையான தமன்னா, கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். தமன்னாவுக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து ஐதராபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அவர், ஐதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையிலுள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
வீட்டிற்கு வரும் தமன்னாவை வாசலிலேயே வரவேற்று அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்றார்கள். அவரது செல்ல நாயும், துள்ளிக்குதித்து அவரை வரவேற்றது.