கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி எந்தவிதத்திலும் ஒத்துழைக்கவில்லை – பொதுஜன பெரமுன

0
280

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எதிர்க்கட்சியினர் எந்தவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல செயல்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.நெருக்கடியான சூழ்நிலையில் இலாப நோக்கத்துக்காகச் செயல்படும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்கம் சிறந்த முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையான முறையில் செயல்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எதிர்க்கட்சியினர் எந்தவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

நெருக்கடியான சூழ்நிலையில் இலாப நோக்கத்தை கருத்தில் கொண்டு பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் வாரம் தொடக்கம் அரசியல் ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.