26 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்?

கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் பயணித்த மக்களையும், 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணித்த மக்களையும் உடனடியாக தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில் தப்பி வந்த நபர் ஒருவர் மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் வருகை தந்து 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணத்தை மேற்கொண்டு மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு உரிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பேரூந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...

சாராஜஸ்மின் குறித்த மரபணுபரிசோதனை அறிக்கையை ஏற்கமுடியாது- அருட்தந்தை சிறில்காமினி

சாராஜஸ்மினின் மரபணுபரிசோதனைகுறித்த அறிக்கையை  ஏற்க முடியாது என அருட்தந்தை சிறில்காமினி தெரிவித்துள்ளார். சாராஜஸ்மின் என அழைக்கப்படும் புலத்சினி மகேந்திரனின் உயிரிழப்பு குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய...

மிருசுவில் கொலை தொடர்பில் மூவர் கைது!

கொலை தொடர்பாக மகன்கள் உட்பட மூவர் கைது!! தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும்...