கொரோனா வைரஸால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நீண்டகாலம் நீடிக்கும் என பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு மூளை பாதிப்பு வெளிப்படுகிறது என்று ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள்.
பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 1.25 மில்லியன் நோயாளிகளை உள்ளடக்கிய ஆய்வுக்குப் பிறகு ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக, சுயநினைவின்மை, டிமென்ஷியா போன்றவை ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.